சண்டிகர்
பஞ்சாப் மாநிலம் சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாதது என அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இன்று சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி நடைபெற்றது. தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்த்து போட்டியிட்டன.
ஆம் ஆத்மி கட்சி மேயர் பொறுப்புக்கும் காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன.
மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பாஜக வேட்பாளர் மனோஜ் சோனகர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் சிங் 12 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.
இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
மாநகராட்சி மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாது என அறிவித்ததை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா உஅர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நாளை இந்த மனு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.