சென்னை
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதல தமிழகத்தில் மழைக்கு வாய்ய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
”தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலாக லேசான மழை பெய்தது. சென்னையில் இரவு முழுவதும் பரவலாக விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்க வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 31-ந்தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.