பெங்களுரு

பெஞ்சல் புயல் காரணமாக இன்று பெங்களூருவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது வங்கக் கடலில் உருவாகி உள்ள பெஞ்சல் புயல் இன்று  பிற்பகலில் சென்னை அருகே கரையை கடக்கிறது. இந்த புயல் காரணமாக வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பெஞ்சல் புயல் தாக்கத்தால் கர்நாடகாவில் குறிப்பாக தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட தென் கர்நாடக மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று பெங்களூருவில் உள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குறிப்பாக பெங்களூரு, கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர், ராமநகரில் கனமழை பெய்யும் என்றும், துமகூரு, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் கரநாடகா மாநிலத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.