சென்னை
வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர்,
”தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், பரவலாக மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. வங்கக் கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மழையை கொடுக்கவில்லை என்றாலும், நேற்று முன்தினம் முதல் கிழக்கு திசை காற்றினால் தமிழகத்தில் மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக தென், மேற்கு, டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்றுடன் மழை விலகும், அதன் பின்னர், நாளை (திங்கட்கிழமை) கடலூர் உள்ளிட்ட சில பகுதிகளிலும், நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) டெல்டா, மேற்கு மாவட்டங்களிலும் மழை விலகும்
சென்னையில் 17-ந் தேதி (இன்று) இரவில் இருந்தும், தமிழகம் முழுவதும் பரவலாக வருகிற 20-ந் தேதியில் இருந்தும் பருவமழை குறைந்து பனிப்பொழிவு தொடங்கும். வருகிற 23 (சனிக்கிழமை) அல்லது 24 (ஞாயிற்றுக்கிழமை)-ந் தேதிகளில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ வலுப்பெறலாம் என்பதால் தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடையத் தொடங்கும்”
என அறிவித்துள்ளார்.