சென்னை:
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 3 மணி நேரத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மழை காரணமாக சில இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும், சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.