சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செப்டம்ப 21ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளத.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று முதல் வரும் 19ம் தேதி வரை கனமழையும், அதைத்தொடர்ந்து 21ந்தேதி வரை மிதமானமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. மயிலாப்பூர், கிண்டி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர், வடபழனி, விருகம்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், போரூர், பூவிருந்தவல்லி, வளசரவாக்கம், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, மாதவரம், பெரம்பூர், ரெட்ஹில்ஸ் உள்பட சென்னையின் புறநகர் பகுகிதளிலும் கனமழை கொட்டியது.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 21ம் தேதி வரை மிதமான மழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு சில தினங்களாக மழை கொட்டி தீர்த்தது. நேற்றும் (செப்.15) மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி பகலில் ஒருசில பகுதிகளிலும், இரவில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
மேலும், , தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ததது. இந்த நிலையில், இந்த மழை வரும் 21ம் தேதி வரை மிதமான மழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இன்று 16-09-2025: ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் சென்னையின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17-09-2025: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-09-2025: நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19-09-2025: திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் 21ந்தேதி வரை சென்னை உள்பட பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.