சென்னை:
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை-வங்கக் கடலில் அந்தமான் பகுதிகளில், இன்று தென் மேற்கு பருவ மழை துவங்குவதாகவும், தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனாலும், வெப்ப சலனம் காரணமாகவும், தமிழகத்தில் பல இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.