சென்னை:
மிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை, கள்ளக்குறி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை சென்னையின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.