சென்னை:
மிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் நகர்வு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.