சென்னை: மழைக்காலமும், பண்டிகைக் காலமும் தொடங்குவதால் சவால் நிறைந்த காலகட்டமும் தொடங்குவதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பது தமிழகத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கண்காணிப்பு, பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால் தமிழக எல்லையோர மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
மழைக்காலமும், பண்டிகைக் காலம் தொடங்குவதால் சவால் நிறைந்த காலகட்டமும் தொடங்குகிறது என்று கூறினார்.