அமெரிக்காவின் ‘சேலஞ்சர்’ விண்கலம் வெடித்து சிதறிய 34வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
1986ம் ஆண்டு ஜனவரி 28ந்தேதி அன்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 7 விண்வெளி வீரர்களுக்கு விண்ணுக்கு அனுப்பிய சேலஞ்சர் விண்கலம் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறி, 7 பேரையும் பலிவாங்கியது.
1986-ம் ஆண்டு ஜனவரி 28ந்தேதி காலை 11:38 மணி அளவில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சேலஞ்சர் விண்கலம் 37 வயது நியூ ஹாம்ப்ஷயர் ஆசிரியை கிறிஸ்டா மெக்அலிஃப் உள்பட 7 பேருடன் விண்ணில் பாய்ந்தது. இந்த நிகழ்வை ஏராளமானோர் நேரலையாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக விண்கலம் விண்ணில் பாய்ந்த 73 வினாடிகளில், அதில் இருந்து புகையும் தீப்பிழம்புகளும் வெளிவருவதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்த சில வினாடிகளில், அந்த விண்கலம் வெடித்து சிதறியது. இந்தநிகழ்வில் அதில் பயணம் செய்த 7 பேருமே உடல்சிதறி பலியானார்கள்.
இதில் பயணம் செய்த அனைவரும் ஏற்கனவே எஸ்.டி.எஸ் -51 எல் சேலஞ்சர் விமானக் குழுவினர் ஸ்லைடு கம்பி கூடைகளில் அவசரகால முன்னேற்றப் பயிற்சியைப் பெறுகிறார்கள். அவர்கள் (எல் டு ஆர்) மிஷன் ஸ்பெஷலிஸ்ட், ரொனால்ட் மெக்நாயர், பேலோட் ஸ்பெஷலிஸ்ட், கிரிகோரி ஜார்விஸ், விண்வெளி பங்கேற்பாளர் ஆசிரியர், கிறிஸ்டா மெக்அலிஃப். அவர்களுக்குப் பின்னால் நேரடியாக மிஷன் ஸ்பெஷலிஸ்ட் ஜூடி ரெஸ்னிக் மற்றும் மிஷன் ஸ்பெஷலிஸ்ட் எலிசன் ஒனிசுகா இருந்தனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வு அமெரிக்கா உள்பட உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அப்போதைய அமெரிக்க அதிபர் ரீகன் நிலவில் கால்பதித்த முதல் நபரான நீல் ஆம்ஸ்ட்ராங் தலைமையில் சிறப்பு ஆணையம் அமைத்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், விண்கலத்தில் பொருத்தப்பட்ட ‘ஓ-ரிங்’ எனும் சாதனம், குளிர்ந்த வானிலை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் செயல்படாததால் ஏற்பட்ட தொடர் விளைவுகள் சேலஞ்சரை வெடிக்கச்செய்தன என்று விசாரணையில் தெரியவந்தது.
விண்கலத்தின் வலது கை திட ராக்கெட் பூஸ்டரில் ஒரு ரப்பர் “ஓ-ரிங்” முத்திரை தோல்வியடைந்ததால், சூடான வாயு தப்பிக்க மற்றும் சுற்றுப்பாதையின் வெளிப்புற எரிபொருள் தொட்டியை சேதப்படுத்த அனுமதித்தது, அத்துடன் பூஸ்டரை தொட்டியுடன் இணைத்த கியர். ஓ-மோதிரம் ஓரளவு தோல்வியடைந்தது,
ஏவுகணை லிஃப்டாஃப் நேரத்தில் வெப்பநிலை 36 டிகிரி பாரன்ஹீட் (2 டிகிரி செல்சியஸ்) —15 டிகிரி எஃப் (8 டிகிரி சி) முந்தைய ஷட்டில் ஏவுதலை விட குளிராக இருந்தது என்று நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது மனித தவறு என்றும், “சேலஞ்சரைத் விண்ணில் செலுத்தும் முன்பு இதுகுறித்து அறிந்திருக்க வேண்டும், பனிக்காலத்தில் ஏவகணை ஏவுவது பாதுகாப்பானது அல்ல என்று கவலையை தெரிவித்திருந்தது. “முடிவெடுப்ப வர்கள் அனைத்து உண்மைகளையும் அறிந்திருந்தால், அவர்கள் அன்று விண்ணில் ஏவுவதை தடுத்திருப்பார்கள் என்று கூறியிருந்தது.
முதலில், ஜனவரி 23-ம் தேதி அன்று சேலஞ்சர் விண்கலத்தை விண்ணில் ஏவத் திட்டமிட்டிருந்தது நாஸா. தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மோசமான வானிலை காரணமாகப் பயணம் பல முறை தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக ஜனவரி 28-ம் தேதி அந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், இது வரலாற்றில் மிகமோசமான நிகழ்வுகளை பதிவு செய்துவிட்டது.
அதுபோல, கடந்த 2003 – பிப்ரவரி 1-ந்தேதி அன்று இந்திய வம்சவாளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவுடன், விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பிக்கொண்டிருந்த கொலம்பியா விண்கலம், பூமியின் வளிமண்டலத்தை எட்டியபோது எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது,
இந்த விபத்திலும், அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா உள்பட 7 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.