
எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படம் ‘சக்ரா’.
விஷால் நாயகனாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா காசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள்.
தொழில்நுட்ப திரில்லராக உருவாகிவரும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியமும், படத்தொகுப்பை சமீர் முகமதுவும் பார்த்துக் கொள்கிறார்கள். எஸ்.கண்ணன் கலை இயக்குனராகவும், அனல் அரசு சண்டைக் காட்சிகளையும் அமைத்துள்ளனர்.
இப்படம் மே 1-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]