சத்தீஸ்கர்:
நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையில் நாட்டியிலேயே முதல் முறையாக பெண் கமாண்டோ படையை சத்தீஸ்கர் மாநில அரசு அமைத்துள்ளது.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ” ராஞ்சியிலிருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள நக்ஸல் ஆதிக்கமுள்ள தன்டேவடா மாவட்டத்தில் கடவுள் தண்டேஸ்வரியின் வீரர்கள் என்ற பெயரில் சிறப்பு கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது.
நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையில் களம் இறங்கும் பெண் கமாண்டோக்கள் படையில் சரணடைந்த பெண் நக்ஸலைட்களும் அடங்குவர்.
ஏற்கெனவே, நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையில் மாநில போலீஸும் பாரா மிலிட்டரி படையும் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் முறையாக நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பெண் கமாண்டோக்களும் ஈடுபடுவார்கள்.
இதற்காக அவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி தரப்பட்டுள்ளது. அடர்ந்த காடுகளில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
சரணடைந்த பெண் நக்ஸலைட்கள் உட்பட கமாண்டோ படையில் இருக்கும் அனைவரும் உள்ளூர்வாசிகள்.
இதனால், அவர்களுக்கு அந்த சூழலும் மொழியும் எளிதாக இருக்கும். இது நக்ஸல்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என்றனர்.