சென்னை: நடப்பு கல்வியாண்டில்,  பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் 1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு,   முதலில் விளையாட்டு பிரிவுக்கு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரிகளுக்கான (TNEA) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஜூன் 2-ஆம் தேதி வரை TNEA அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிக்கப்பட்டுள்ளது.

இணையவழி ஆவணச் சரிபார்ப்பு ஜூன் 8, 2026 அன்று தொடங்கி, ஜூன் 20 வரை நடைபெறும். தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் (10 மற்றும் 11-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள், 12-ஆம் வகுப்பு பதிவு எண்/மதிப்பெண் பட்டியல், சாதி/வருமானச் சான்றிதழ்கள் மற்றும் தேவைப்படின் நன்னடத்தைச் சான்றிதழ்) ஜூன் 6-க்குள் இணையதளத்தின் வாயிலாகப் பதிவேற்றம் செய்வதை உறுதிசெய்யவும்.‘

இதன் ஒரு பகுதியாக, விளையாட்டுப் பிரிவு (Sports Quota) இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகளுக்கான அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஜூன் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்  சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் அனைத்தும் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக (Anna University) வளாகத்தில் நேரடியாக நடைபெறவுள்ளன.
விளையாட்டு பிரிவில் விண்ணப்பித்த தகுதியான மாணவர்கள் தங்களின் உரிய விளையாட்டு சான்றுகள் மற்றும் கல்வி ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதிகளில் நேரில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]