சென்னை: மக்களிடையே சிறுதானியங்களை பிரபலப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறுதானி யதிருவிழா நடைபெறும் என்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.5157 கோடி ஒதுக்கபடுவதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தால் தாக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டு வருகிறார்.,
அதன்படி, சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியவர், மாவட்டங்கள் அளவிலும், மாநில அளவிலும், முதலமைச்சர் தலைமையில், “சிறுதானிய திருவிழா” நடைபெறும் என்றும், சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இரண்டு மண்டலங்கள் உருவாக்கப்படும் என்றும் கூறினார்.
சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை உள்ளட்டக்கியதாக ஒரு சிறுதானிய மண்டலம் உருவாக்கப்படும்.
வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி அரசு சார்பில் பரிசு வழங்கப்படும்.
காலநிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தாங்கக் கூடிய மாற்றுப்பயிர் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மரம் வளர்ப்புத் திட்டத்திற்காக ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.5157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழவர் சந்தைகளில் காய் கனி வரத்தை அதிகரிக்க ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது.
பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கப்படும்.
கரும்பு சாகுபடிக்கு உதவித் தொகை வழங்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேனி வளர்ப்புக்கு ரூ.10.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உரப் பயன்பாடு, பூச்சிக்கொல்லி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்க 7 விவசாய பயிற்சி மையங்கள் அமைப்படும்.
ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
விதை மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 30 ஆயிரம் மெட்ரிக் டன் விதைகள் வழங்கப்படும்.
மயிலாடுதுறையில் ரூ.75 லட்சத்தில் மண் பரிசோதனைக் கூடம் அறிவிக்கப்படும்.
பயிர்க்காப்பீட்டு திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.2339 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
9.26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடாக ரூ.2055 கோடி வழங்கப்பட்டுள்ளது
பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்காக சிறப்பு நிதியாக ரூ.5 கோடி ஒதுக்கீடு,
மின் இணைப்பு வழங்கப்பட்ட தாட்கோ பயணாளிகளுக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கு நிதி உதவியாக ரூ.20 கோடி ஒதுக்கீடு,
38 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஊடுபயிர் சாகுபடி திட்டத்திற்கு ரூ.27.51 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தென்னை, மா, வாழை உள்ளிட்டவற்றின் சாகுபடிக்கு இடையே ஊடுபயிர்கள் சாகுபடி ஊக்குவிக்கப்படும்
தேனி வளர்ப்புத் தொகுப்புத் திட்டத்திற்கு, வேளாண் பட்ஜெட்டில் ரூ.10.25 கோடி நிதி ஒதுக்கீடு
பண்ணை சாகுபடி முறையில் இயந்திரமயமாக்கல் திட்டத்தை ஊக்குவிக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு
காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க – ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டள்ளது.