டில்லி
கொரோனா பரவலை இந்தியா முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாகத் தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. ஆயினும் தற்போது சில மாநிலங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷன் அவர்கள், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துமாறு கூறியுள்ளார். குறிப்பாகத் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அவர் அக்கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.