இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்களை மத்திய அரசு திடீரென்று நிறுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
2003ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் பத்திரம் அத்தகைய சாதனமாக இருந்து வந்தது. பொது வைப்பு நிதி (PPF), சிறு சேமிப்பு ஆகியவற்றின் வட்டியை அரசு குறைத்தது. இப்பொழுது ரிசர்வ் வங்கி பத்திரங்களை அறவே ஒழித்துவிட்டது. இது நடுத்தர மக்களின் மீது விழுந்துள்ள இன்னொரு பலத்த அடி.
2018 ஜனவரியில் இதைச் செய்தார்கள். நான் கண்டனம் தெரிவித்தேன். மறுநாளே அரசு தன் நடவடிக்கையை விலக்கிக் கொண்டது. இப்பொழுது மீண்டும் ரத்து செய்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும். சமூக வலைத்தலங்களில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.