டெல்லி: நேரு நினைவிடத்தை பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என மையம் பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (NMML) பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (PMML) சங்கம் என மறுபெயரிடப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர், பெயரை மாற்றுவதல், அவரது (நேரு) பங்களிப்பை ஒருபோதும் மறந்து விட முடியாது என தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவன் என்ற வரலாற்று சிறப்பு கட்டிடத்தில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் செயல்பட்டு வந்தது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவ ஜவஹர்லால் நேரு இங்க தங்கியிருந்துள்ளார். அவரது மறைவுக்கு பிறகு, அந்த கட்டிடம், இந்தியாவின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றி அமைக்கப்பட்டு, நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம், இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றப்படும் அதன்படி பிரதமர் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்ற பெயர் ஆகஸ்ட் 14 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதற்கு காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இதுபோன்ற பெயர் மாற்றத்தினால், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஜவாஹர்லால் நேருவின் மகத்தான பங்களிப்பை பிரதமர் மோடி ஒருபோதும் பறிக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும், ‘நாட்டின் முக்கிய சின்னம் இன்று புதிய பெயரைப் பெறுகிறது. நாட்டின் முதல் பிரதமர் குறித்து மோடிக்கு அச்சம், சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. நேருவையும் நேருவின் பாரம்பரியத்தையும் மறுப்பது, சிதைப்பது, அவதூறு செய்வது, அழிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி செய்வதினால் இந்தியாவுக்கான நேருவின் பங்களிப்பை பறித்துவிட முடியாது’ என்று கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]