டெல்லி: மாநிலங்களுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. இழப்பீடு விடுவித்துள்ள மத்தியஅரசு, தமிழகத்திற்கு ரூ.2,240 கோடி விடுத்துள்ளது.

கடந்த மே மாதம் 28ஆம் தேதி நடந்த 43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து, கடன் ஒப்பந்த அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 1.59 லட்சம் கோடி கடன் பெற்று வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. 2020-21ம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ. 3,818.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ. 75,000 கோடி யை கடந்த ஜூலை 15- ஆம் தேதியும், இரண்டாம் தவணையை ரூ.40,000 கோடியை கடந்த அக்டோபா் 7- ஆம் தேதியும் விடுவித்தது. இதில் மீதமுள்ள தொகையான ரூ.44,000 கோடியை மூன்றாவது தவணையாக தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதில் தமிழகத்தின் பங்காக 2 ஆயிரத்து 240 கோடியே 22 லட்ச ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகளை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுதல் போன்ற பொது செலவினங்களை எதிர்கொள்ள, மாநிலங்களுக்கு இந்த இழப்பீட்டு தொகை உதவியாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel