டில்லி:

ராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டது டிஎன்ஏ சோதனை யில் உறுதியானது.

இது நாடு முழுவதும்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதில் இருந்த திசை திருப்பவே, பேஸ்புக் தகவல் திருட்டு சர்ச்சை குறித்து  காங்கிரஸ் மீது குற்றம் சாட்டி உள்ளது பாரதிய ஜனதா என்ற ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில்  கூறி உள்ளார்.

ஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்று மத்திய  வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜின் அறிக்கையின் பின்னணியில் இருந்து விலகவே,  காங்கிரஸ் கட்சியின் மீது பேஸ்புக் டாட்டோ மோசடி குறித்து குற்றம் சாட்டி  பாரதிய ஜனதா அரசு திசை திருப்பி வருவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  கூறி உள்ளார்.

பேஸ்புக்கில் இருந்து மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் நியூயார்க் நிறுவனத்தை பயன்படுத்தி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள  மக்களவை தேர்தலில் ராகுலின் மதிப்பை உயர்த்தி வெற்றி பெற முயற்சிப்பதாக காங்கிரஸ் மீது பாஜ அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று  பரபரப்பு குற்றச்சாட்டை  கூறியிருந்தார்.

அப்போது, அடுத்த மக்களவை தேர்தலில் ‘கேம்ப்பிரிட்ஜ் அனலிடிகா’ மூலமாக ராகுல் காந்தியின் மதிப்பை உயர்த்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்கள் வெளிவந்த போதும் காங்கிரஸ் மவுனம் காக்கிறது.

இந்திய தகவல் மற்றும் சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது,  இந்தியாவில் 20 கோடிக்கும் மேற்பட்டோர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். இவர்களின் தகவல்களை திருடுவது, தேர்தல் நடைமுறைகளில் தலையீடு செசய்வது போன்றவற்றில் ஈடுபட்டால் பேஸ்புக்கிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் கடுமையான அதிகாரத்தை நாங்கள் பெற்றுள்ளோம். தேவைப்பட்டால் தங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இந்தியாவிற்கு வரவழைக்கப்படுவீர்கள் என பேஸ்புக் நிறுவனர்  மார்க்குக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.