
புதுடெல்லி: தேக்கநிலையால் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை அளிக்கும் விதமாக, அரசிடமிருந்து மென்கடன்களை ஆலைகள் பெற்றுக்கொள்வதற்கான தேதி வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் முதல் 2019 செப்டம்பர் வரையிலான நிலுவைத் தொகையை, கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டியுள்ளது. ஆனால், அவை தேக்கநிலை சிக்கலில் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, அரசிடமிருந்து மென் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான கால வரையறை முன்பு மே 31 என்பதாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது விவசாயிகளுக்கு உதவும் வகையில் அந்த கடைசித் தேதி ஜுலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பான வழிகாட்டல்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி மத்திய அமைச்சரவையால், சர்க்கரை ஆலைகளுக்கான மென் கடன்களை வழங்க அனுமதியளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.