டில்லி

ன்னும் இரு தினங்களில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாடெங்கும் வழக்கத்தை விட இம்முறை அதிக வெப்பம் காணப்படுகிறது.    நேற்று உலகில் அதிக வெப்பமாக ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் 50.8 டிகிரி  பதிவாகியது.  வட இந்தியாவின் பல நகரங்களில் 47 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் உள்ளது.   தலைநகர் டில்லியில் ஓரளவு மேகமூட்டம் தென்பட்டது.

வானிலை ஆய்வு மையம், “அரபிக் கடலில் தென்மேற்கு ஈரப்பத காற்று தென்படுகிறது.  அது வரும் ஜூன் 10 ஆம் தேதி வாக்கில் ராஜாச்தானை அடையும்.  அதனால் அங்கு வெப்ப நிலை 4 முதல் 5 டிகிரி வரை குறைக்கூடும்.  அதனால் அதுவரை வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்து காணப்படும்.

தெனிந்தியாவில் இன்னும் இரு தினங்களில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்யக்கூடும்.  அத்துடன் வரும் 10 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.  இந்த மழை கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக இருக்கும்” என தெரிவித்துள்ளது.

இதை ஒட்டி கேரள பேரிடர் நிர்வாக ஆணையம் ஜுன் 9 மற்றும் 10 தேதிகளில் கேரளாவின் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.