சென்னை

டந்த இரு ஆண்டுகளாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு மனித வள மேம்பாட்டுதுறை வழங்கி வந்த நிதி. 50%கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது.

தரமணியில் அமைந்திருக்கும் இந்த நிறுவனம் தமிழ் மொழியில் உள்ள பழம்பெரும் இலக்கியங்களையும், அதன் மூலத்தையும் கண்டு பிடிக்க நிறுவப்பட்டது.  இந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட முக்கிய பணியானது திருக்குறளை அனத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பது ஆகும்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் படி, “கடந்த 2013-14ல் இந்த நிறுவனத்துக்கு ரூ. 9 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.  அடுத்தடுத்து, 2014-15ல் ரூ8 கோடி ஆகவும், 2015-16ல் ரூ,11.99 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் 2016-17ல் ரூ5 கோடியும், இந்த வருடம் இதுவரை ரூ. 3 கோடி மட்டுமே நிதி உதவி வழங்கப் பட்டுள்ளது  மேலும் இதுவரை மொத்தமாக வழங்கப்பட்டுள்ள 79 கோடி ரூபாயில் சுமார் 9.05 கோடி ரூபாய் நிறுவனம் உபயோகிக்காமல் உள்ளது” எனவும் காணப்படுகிறது

இது குறித்து இந்த நிறுவனத்தின் துணைத் தலவர் பிரகாசம், “தேவையான அளவு நிதி உதவியை மட்டுமே அரசு அளித்துள்ளது.  ஏதாவது ஒரு வருடம் அளித்த தொகை உபயோகப் படுத்தப் படவில்லை என்றால் அந்த தொகை அடுத்த வருட செலவுகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வருடம் இதுவரை வழங்கப்பட்ட ரூ. 3 கோடி முதல் தவணை ஆகும்.  மேலும் நிதி உதவி வரும் மாதங்களில் வழங்கப்படும்” எனக் கூறினார்.

மேலும் இது குறித்து ஒரு அரசு அதிகாரி, “ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்தே இந்த நிறுவனத்தை ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் நடத்தி வந்தார்.  தற்போது ஜூலை மாதம் முதல்வர், மற்றும் அதிகாரிகள் ஒரு கலந்தாலோசனை நடத்தி உள்ளனர்.  ஆனால் அதற்கு முன் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு கலந்தாய்வும் நிகழவில்லை.  அதனால் தான் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் எந்த ஒரு திட்டமும் தீட்டப் படாமல் நிறுவனம் உள்ளது” என கூறினார்.

மேலும் அவர் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் பாண்டிய ராஜன் இந்த நிறுவன முன்னேற்றத்துக்கு உதவுவதாக கூறி உள்ளதாக தெரிவித்தார்.