தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டிருந்த மத்திய ரிசர்வ் அதிரடிப்படை படை திடீர் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய அரசின் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அந்த பகுதிகளில் மத்திய ரிசர்வ் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
மக்கள் போராட்டங்களை அடக்க மத்திய அரசு நேரடியாக களமிறங்கி இருப்பதாகவும், அதன்படியே சுமார், 2000-க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் உள்பட மத்திய ரிசர்வ் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்வு மாநில அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்பினர்.
திடீரென மத்திய போலீஸ் குவிப்பப்பட்டது அந்தப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டிருந்த மத்தியப் படை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் மத்தியப் படை படையினர் திரும்பிச் சென்றதாக தகவல் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் வற்புறுத்தலின் பேரிலேயே மத்திய படை வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.