ன்யாகுமரி

விரைவில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஸ்ரீபட்நாயக் கூறி உள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என பல மக்களும் அரசியல் வாதிகளும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.   ஆனால் இதற்கான இடத்தை மாநில அரசு அளிக்க வில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.   ஆனால் அதை மாநில அரசு மறுத்துள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்ரீபட்நயக் இன்று ஓகி புயல் பாதித்த இடங்களை பார்வையிட கன்யாகுமரி மாவட்டத்துக்கு வந்துள்ளார்.   அவர் அப்போது  செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, “நாடு முழுவதும் 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.     இதற்காக முதற் கட்ட நிதியாக ரூ. 14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.   இந்த மருத்துவமனை விரைவில் தமிழகத்திலும் அமைக்கப்பட உள்ளது    அது தவிர  நாடு முழுவதும் முக்கிய மாநில நகரங்களில்  யோகா பூங்காக்கள் அமைக்கபட உள்ளது.” என தெரிவித்தார்.

ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு, “ரஜினி அரசியலுக்கு வருவது அவரது உரிமை.   அதன் பின்னணியில் பாஜக உள்ளது என்பது தவறான கருத்து.  விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்” என பதிலளித்தார்.