மத்திய அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமான முரளிதரன் திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் “கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை மாநில அரசு மூடி மறைக்கிறது” என குற்றம் சாட்டினார்.

“கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா, தனது புகைப்படம் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வர வேண்டும் என்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்” என அவர் தெரிவித்தார்.
“கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த போது சைலஜாவை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய பெரிய பெரிய ஊடகங்கள் இப்போது மவுனமாக இருப்பது ஏன்?” என அமைச்சர் முரளிதரன் ஆவேசமாக வினா எழுப்பினார்.
“கொரோனா பரவல் அதிகரித்து வரும் இந்த சமயத்தில் சினிமா தியேட்டர்களை திறந்தது நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டது” என்று அவர் புகார் தெரிவித்தார்.
– பா. பாரதி
[youtube-feed feed=1]