டெல்லி:  நாட்டில் உள்ள முக்கிய  விசாரணை அமைப்புகள் பாஜகவின் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன  கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன  கார்கே.  பா.ஜ.,வில் இணைந்தவர்களின் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. 2014ல் மோடி பிரதமர் ஆனது முதல் ஊழல் வழக்குகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பா.ஜ.,வில் சேர்ந்துள்ளனர். விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பா.ஜ., பயன்படுத்துகிறது. விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கூறியுள்ளார்.