டில்லி
கொரோனா தடுப்பூசியை வீடு வீடாகச் சென்று செலுத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வந்த போதிலும் விரைவில் மூன்றாம் அலை பரவல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையொட்டி நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அவ்வகையில் நாடெங்கும் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பலர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட போதிலும் சிலர் என்னும் முதல் டோஸ் கூட போட்டுக் கொள்ளாமல் உள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் நாளை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். இதில் மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.