டில்லி,

வசர தேவைக்காக ஏழைகள் தங்களிடம் உள்ள நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது வழக்கம். தற்போது அதற்கும் ஆப்பு வைத்துள்ளது ரிசர்வ் வங்கி.

அவசர தேவைக்காக  நகைகளை  வங்கிகளில் அடமானம் வைப்பவர்கள் ரூ.1 லட்சம் வரை பணமாக பெற முடியும். அதற்கு மேல் என்றால்தான் கணக்கில் வரவு வைக்கப்படும் அல்லது காசோலையாக கொடுக்கப்படும். இதுதான் நடைமுறை.

ஆனால், தற்போது இதிலும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி. இதுகுறித்து கடந்த வியாழக்கிழமை புதிய விதிகளை அறிவித்து உள்ளது.

அதன்படி, தங்க நகைகளின் பேரில் கடன் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள்  20 ஆயிரம் ரூபாய்கு மேலான  தொகையை ரொக்கமாக கொடுக்கக்கூடாது என்று அறிவித்து உள்ளது.

இந்த புதிய விதி உடனே அமலுக்கு வருவதாகவும் கூறி உள்ளது. ஆர்பிஐ-ன் இந்த புதிய அறிவிப்பு நிதி நிறுவனங்கள்  மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

இதுகுறித்து ரிசவர் வங்கி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழ் வங்கிகள் அல்லாது நிதி நிறுவனங்கள் மீது இந்த புதிய திருத்தம் உடனடியாக அமலுக்கு வருகின்றது என்றும், இதன் காரணமாக ரூ. 20,000 வரை மட்டுமே ரொக்கப் பணமாக கடன் அளிக்க முடியும் என்றும், இந்த சட்ட விதி  உடனே அமலுக்கு வருகின்றது என்றும் மத்திய வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே பணமதிப்பிழப்பு காரணமாக பொது மக்கள் கடும் அவஸ்தை பெற்று, தற்போதுதான் ஓரளவு சீரடைந்து வரும் வேளையில், தற்போது, தங்க நகைக்கடனுக்கும் புதிய விதியை அமல் படுத்தி உள்ளது மத்தியஅரசு.

இந்த விதிகளின் காரணமாக,  அவசர செலவு,  மருத்துவ செலவு, திருமண செலவு போன்ற வற்றிற்காக தங்க நகைகளை வைத்து கடன் வாங்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வயிற்றில் மீண்டும் அடித்துள்ளது மத்திய அரசு.