டில்லி
நாடெங்கும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய நிபுணர் குழு வருகிறது.

உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்ப்பட்டு அது இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வேகமாக பரவ் வருகிறது. கடந்த 2 ஆம் தேதி ஒமிக்ரான் தொற்று முதலில் கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்டது. தற்போது அது 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவி உள்ளது.
நேற்று வரை 415 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 110 பேர், அடுத்ததாக டில்லியில் 79 பேர், குஜரத்தில் 41 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து தெலுங்கானாவில் 38 பேரும், கேரளாவில் 37 பேரும், தமிழ்நாட்டில் 34 பேரும், கர்நாடகாவில் 31 பேரும், ராஜஸ்தானில் 22 பேரும், ஒடிசா, அரியானா, ஆந்திராவில் தலா 4 பேரும், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளத்தில் தலா 3 பேரும், உத்தரபிரதேசத்தில் 2 பேரும், சண்டிகார், லடாக், உத்தரகாண்டில் தலா ஒருவரும் இத்தொற்றுக்கு உள்ளாகினர்.
பாதிக்கப்பட்டோரில் 115 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீடு திரும்பு உள்ளனர்.
பிரதமர் மோடி ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடத்திய ஆலோசனையின் போது ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு மத்திய பன்நோக்கு நிபுணர் குழு அனுப்பி வைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதையொட்டி மத்திய அரசு நிபுணர் குழுக்களை கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. நிபுணர் குழுக்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் 3 முதல் 5 நாட்கள் தங்கி இருக்கும். மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும்.
மேலும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், கண்காணிப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கொரோனா பரிசோதனை, பாதிப்பு நிறைந்த பகுதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்புதல் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.
[youtube-feed feed=1]