டெல்லி
மத்திய அரசு நாடெங்கும் ஒரே மின்கட்டணம் நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை என அறிவித்துள்ளது.
அண்மையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்க மிகவும் துயர் அடைந்துள்ளனர். இந்த மின் கட்டண உயர்வு மற்ற மாநிலங்களோடும் ஒப்பிடும் போது மிகவும் குறைவு என தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில் மத்திய அரசு நாடெங்கும் ஒரே மின்கட்டணம் விதிக்கும் நடைமுறைக்கான திட்டத்தை அமல் படுத்த உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகின ஆனால் மத்திய மின்சாரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் இதை மறுத்துள்ளார்
அமைச்சர் இது குறித்து
“மின்சார சட்டம் 2003 விதிகளின்படி மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நுகர்வோருக்கு கட்டணத்தை நிர்ணயிக்கிறது என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது.இதனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின்சார கட்டணம் தொடர்பான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை”
எனத் தெரிவித்துள்ளார்.