டெல்லி: வீட்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது, ஒரு சிலிண்டருக்கும் அடுத்த சிலிண்டருக்கும் இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்கும். தற்போது, அதை 25 நாட்களாக அதிகரித்து மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.
வீட்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான கட்டாய குறைந்தபட்ச இடைவெளியை மத்திய அரசு 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக உயர்த்தியுள்ளது. மார்ச் 2026 முதல் அமலுக்கு வரும் இந்த நடவடிக்கை, சில பயனர்கள் வழக்கமான ~55 நாட்களுக்கு பதிலாக ஒவ்வொரு 15 நாட்களுக்கும் முன்பதிவு செய்து வருவதால், பதுக்கல் மற்றும் பீதி கொள்முதல்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன, வணிக பயனர்களை விட உள்நாட்டு பயனர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால், வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஈரான் அமெரிக்காவுக்கு பதிலடியாக அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது., மேலும், கச்சா எண்ணை போக்குவரத்துக்கு உதவிகரமாக இருந்து வரும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்தியாவிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என ‘கெயில்’ நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமையல் எரிவாயு முன்பதிவு செய்வதற்கான காலத்தை 25 நாட்களாக உயர்த்தி உள்ளது. இந்த புதிய விதியை செயல்படுத்த ஏஜென்சிகளின் மென்பொருள் உடனடியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முன்பதிவு செயல்முறை அப்படியே உள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பினால், சிலிண்டரைப் பெற்றவுடன் அடுத்த முன்பதிவைச் செய்யலாம். இருப்பினும், 25 நாட்களுக்குப் பிறகுதான் முன்பதிவு செய்ய முடியும்.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், ‘பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையை தடுப்பதற்காக, எல்பிஜி சிலிண்டரின் முன்பதிவு காலத்துக்கான இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக, அதாவது 15 நாட்களில் சிலிண்டரை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வதாக பரவலாக புகார்கள் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் எரிவாயு சிலிண்டர் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், LPG சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை விட சமையல் எரிவாயு சிலிண்டருக்கு முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு தான் எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் முகவர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த விதிகளின்படி, ஒவ்வொரு நுகர்வோரும் வருடத்திற்கு 12 மானிய விலை சிலிண்டர்களை மட்டுமே வாங்க முடியும், கூடுதலாக மூன்று மானியம் இல்லாத சிலிண்டர்கள். இதனால், ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை ஒரு எரிவாயு இணைப்பிற்கு மொத்தம் 15 சிலிண்டர்களை வாங்கலாம்.
[youtube-feed feed=1]