டில்லி

ரேஷன் கடைகளுக்காக மின்னணு எடை இயந்திரங்கள் வாங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு மாநில அரசுக்கும் அந்தந்த மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உணவு தானியங்களை மத்திய அரசு மாநில அரசு மூலம் விற்பனை செய்கிறது.   இந்த தானியங்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தானிய இருப்பில் இருந்து வழங்கப்படுகின்றன.   இந்த தானியங்கள் கொள்முதல் விலையில் இருந்து ரு.17 அதிகம் விலை வைத்து ரேஷன் கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றன.

இந்த அதிகம் வசூலிக்கப்படும் தொகையை அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.   இந்த பணத்தின் மூலம் மாநில அரசுகள் ரேஷன் கடைகளுக்காக மின்னணு எடை இயந்திரங்களை வாங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.    அதாவது இவ்வாறு குவிண்டலுக்கு ரூ.17 என வழங்கப்படும் தொகையைச் சேமித்து அதை ரேஷன் கடைகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம் என்னும் விதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உணவுத் துறைச் செயலர் சுதான்சு பாண்டே, “தற்போது அளிக்கப்பட்டு வரும் கூடுதல் தொகையானது அனைத்து செலவுகளையும் கணக்கிட்டு மேலே கூடுதலாக அளிக்கப்படும் தொகையாகும்.  தற்போது தொழில்நுட்பம் முன்னேறி வருவதால் தற்போது மாநில அரசுகள் தங்கள் செயல்பாட்டுச் செலவை வெகுவாக குறைத்துள்ளன.   இதனால் கிடைத்துள்ள அதிகப்படியான தொகை மூலம் மின்னணு எடை இயந்திரங்களை வாங்கலாம் எனக் கூறி உள்ளது.

டில்லியில் ரேஷன் கடைகளுக்கு அளிக்கப்படும் உணவு தானியங்கள் வீணாவதாகச் சமீபத்தில் புகார் எழுந்தது.  இதையொட்டி டில்லி மாநில அரசுக்கு மத்திய அரசு மின்னணு எடை இயந்திரங்கள் வாங்க வலியுறுத்தியது.   ஆனால் டில்லி அரசு அதற்குச் செவி சாய்க்காமல் உள்ள நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.