டில்லி

பொதுமக்களுக்கு வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோன் தடுப்பூசி வழங்கல் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியா உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இந்த பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  தற்போது கொரோனா தடுப்பூசி உலக அளவில் அளிக்கத் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இரு மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.   இந்த கோவாக்சின் உள்ளிட்ட இரு கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.  இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டிவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த டிவிட்டர் பதிவில் ஹர்ஷ் வர்தன், “நாடெங்கும் 719 மாவட்டங்களில் சுமார் 57 ஆயிரம்  பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்க வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ளது.   கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக 96000 பேருக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.