டில்லி

த்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை என தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழ்வுவதும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிக்காலம் 5 ஆண்டுகள் என உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது. மத்திய அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக பணிக்காலத்தை 4 குரைத்து சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.  இதையொட்டி தீர்ப்பாய உறுப்பினர்களுக்கு பணிக்காலம் நிர்ணயிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் சென்னை பார் அசோசியேஷன் மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது நாடெங்கும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் பல பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதற்கு உடனடியாக ஆட்களை நியமிக்க வேண்டும் எனவும் இரு மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.   ஆனால் மத்திய அரசு காலி பணியிடங்களை நிரப்பவில்லை.  எனவே இது குறித்து கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் 10 நாட்களுக்குள் விடை அளிக்கக் கடந்த மாதம் 16 ஆம் தேதி உத்தரவிட்டது.

நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “ஏற்கனவே தீர்ப்பாயங்களில் உள்ள காலி இடங்களை நிரப்பக்கோரி உத்தரவிட்டும் ஏன் இன்னும் நிரப்பவில்லை?  மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது மரியாதையும் இல்லை நாங்கள் வழங்கும் தீர்ப்பை மதிப்பதும் இல்லை.  எங்களுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. உங்களால் தீர்ப்பாயங்களில் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், அவற்றை கலைத்து விட்டு மூடிவிடுங்கள். தேவை இல்லாமல் எங்களின் பொறுமையை நீங்கள் சோதிக்க வேண்டாம். அரசுடனான மோதலை நாங்கள் விரும்பவில்லை.

இன்னும் இரண்டு மாதங்களில் நியமனங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறிய மத்திய அமைச்சகம்  இரண்டு வருடங்களுக்கு மேலாகக் காலியிடங்கள் பூர்த்தி செய்யவில்லை. இதற்கு காரணம் என்ன?  நீங்கள் பணியிடங்களைப் பூர்த்தி செய்யாமல், தீர்ப்பாயங்களைப் பலவீனப்படுத்துகிறீர்கள்.  இதற்காக நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை”.என எச்சரித்த நீதிபதி அடுத்த விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.