டில்லி

த்திய அரசு வங்கதேசம் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய வெங்காய ஏற்றுமதி நாடாகும். இங்கு உள்நாட்டு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக மார்ச் 2024 வரை வெங்காயம் ஏற்றுமதி செய்யக் கடந்த ஆண்டு தடை விதித்தது. எனவே அண்டை நாடுகளில் வெங்காயம் விலை உயர்ந்தது.

தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் வங்கதேசம், மொரீஷியஸ், பக்ரைன் மற்றும் பூடான் ஆகிய 4 நாடுகளுக்கு 54,760 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதில் வங்கதேசத்திற்கு 50,000 டன் வெங்காயம், மொரீஷியசுக்கு 1,200 டன், பக்ரைனுக்கு 3,000 டன் மற்றும் பூட்டானுக்கு 560 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த மாதம் 31ம் தேதி வரை இந்த அளவு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.