டில்லி
தற்போது ஏழு மாநிலங்களில் உள்ள விமான நிலைய பராமரிப்பு குத்தகை மாநில அரசுகளை கலந்தாலோசியாமல் அதானி குழுமத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் விமான நிலைய கட்டுப்பாட்டு குழு ஆறு மாநிலங்களில் உள்ள விமான நிலையத்தை நடத்த மற்றும் பராமரிக்க டெண்டர்கள் கோரி இருந்தன. இதற்கான விதிமுறைகள் மாநிலங்களவையில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அதன்படி டெண்டர்கள் குறித்து விமான நிலயங்கள் அமைந்துள்ள மாநில அரசுகளையும் கலந்தாய் வேண்டும் என்பதும் விதிமுறைகளில் ஒன்றாகும்.
இம்முறை லக்னோ, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத், கவுகாத்தி, மற்றும் மங்களூரு ஆகிய விமானநிலையங்களை நடத்துவது மற்றும் பராமரிப்புக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அதானி குழுமத்துக்கு அளிக்காட்டுளது. மாநில அரசுகளுடன் இது குறித்து மத்திய அரசு கலந்தாய்வு ஏதும் நடத்தாமல் தானே முடிவு செய்துள்ளதாக தக்வல்கள் வந்துள்ளன.
இது குறித்து எதிர்க்கட்சிக்ள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கேரள முதல்வ்ர் அதானி குழுமத்தின் விமான நிலைய பராமரிப்பு அனுபவம் குறித்து வினா எழுப்பி வழக்கு பதிய உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது மாநிலங்களவையின் வழிகாட்டுதலை மீறி இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.