டெல்லி
வரும் ஜூலை 23 அன்று மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மக்களவை தேர்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் நடப்பு நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை தேர்தல் முடிந்து தேசிய ஜனநாயக கூட்டணி 3 ஆவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது
எனவே இந்த் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 23 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என மத்திய விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு,
“இந்திய அரசின் பரிந்துரையின் பேரில், 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஜூலை 22, 2024 முதல் ஆகஸ்ட் 12, 2024 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது”
என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.