டில்லி

ரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் 4 ஜி சேவை மேம்பாட்டுக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் நிறுவனம் ஒரு காலத்தில் தனி நிறுவனமாக இருந்தது.  ஆனால் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் வரத் தொடங்கியதால்  பலரும் அதன் சேவையில் இருந்து விலகத் தொடங்கினர்.  குறிப்பாக லேண்ட் லைன் தொலைப்பேசியைப் பலரும் திரும்ப அளித்து வருகின்றனர்.

மேலும் அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களும் தற்போது 4 ஜி வேகத்தில் இணைய வசதியை அளித்து வருகின்றன.  ஆனால் பி எஸ் என் எல் அந்த விஷயத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது.   இதனால் பி எஸ் என் எல் பெரிதும் இழப்பைச் சந்தித்து வருகிறது.  இந்த நிறுவனத்தை மேம்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அவற்றில் ஒன்றாக பி எஸ் என் எல் மூலமும் 4 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.  அதை நாடெங்கும் விரிவு படுத்துவதன் மூலம் மீண்டும் வாடிக்கையாளர்களைக் கவர அந்நிறுவனம் முயன்று வருகிறது.  இது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஒரு கேல்ஈ எழுப்பினார்.

அதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.  அந்த பதிலில் பி எஸ் என் எல் நிறுவனம் தனது 4 ஜி சேவையை விரிவுபடுத்த 2020-21 ஆம் ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.