டில்லி

மிழ்நாடு அரசு இயற்றிய நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்களிக்கும் அவசர சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.

அகில இந்திய மருத்துவக் கல்லூரி சேர்ப்பு விதிகளின்படி மருத்துவ படிப்புக்கான சேர்க்கைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் முடிவடைய வேண்டும்.   ஆனால் நீட் தேர்வு,  மற்றும்  மாநில கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு போன்ற காரணங்களால் இன்னும் கலந்தாய்வு ஆரம்பிக்கப் படவில்லை.    இதை முடிவுக்கு கொண்டு வர,  நீட் தேர்வுக்கு இந்த ஒரு வருடம் மட்டும் விலக்கு அளிக்க அவசர சட்டம் இயற்றினால் அதை பரிசீலனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்த ஒரு வருடம் மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவசர சட்டம் இயற்றியது.   அந்த மசோதா மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்கப்பட்டது.   அந்த சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.   அதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகமும்,  மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும்  ஒப்புதல் அளித்துள்ளன.

விரைவில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.