சென்னை:

ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகளை  அம்பலப்படுத்திய இந்து பத்திரிகை ஆசிரியர் ராம் மீதும், இந்து பத்திரிகை மீதும்  வழக்கு தொடரப்படும் என்று, உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற ரஃபோர் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் தெரிவித்திருந்தார்.

இந்த பத்திரைகயாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, சென்னை தமிழக பத்திரிகையாளர்கள் சங்கங்கள் சார்பில் மத்தியஅரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு,  ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, ஒப்பந்தம் தொடர்பான ஆவனங்களுடன் முறைகேடு குறித்து, இந்து பத்திரிகையில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இதற்காக நாளிதழ் மீதும் ‘தி இந்து’ குழுமத்தின் தலைவரான பத்திரிகை யாளர் என்.ராம் மீதும் அரசாங்க ரகசிய சட்டத்தின்கீழ் மத்திய அரசு வழக்கு தொடரப் போவதாக மத்திய அரசு மிரட்டியது.

இதை கண்டித்து, ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி, ஊடக சுதந்திர மையம், சென்னை பிரஸ் கிளப் ஆகியவை சார்பில் சென்னையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டத்தில் நக்கீரன் கோபால் உள்பட  ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்

இந்த கூட்டத்தில் நக்கீரன் கோபால், ஊடக சுதந்திரத்துக்கான கூட் டணி அமைப்பைச் சேர்ந்த அ.கும ரேசன்,  ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பாளர் பீர் முகமது, புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாக ஆசிரியர் எஸ்.கார்த்திகை செல்வன், கார்ட்டூனிஸ்ட் ஜி.பாலா, பத்திரிகை யாளர் கவிதா முரளிதரன், மாற்றத்துக்கான ஊடகவிய லாளர்கள் மையத்தைச் சேர்ந்த அசீப், ஊடகவியலாளர்கள் அறக் கட்டளையைச் சேர்ந்த சந்தியா ரவிசங்கர் ஆகியோர் ஊடகச் சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.

போராட்டத்தின்போது பேசிய  வழக்கறிஞர் பி.பி.மோகன், ‘‘இந்தச் சட்டம் காலாவதியான ஒரு சட்டம். இதை பத்திரிகை யாளர்களுக்கு எதிராக பயன் படுத்தக் கூடாது’’ என்று வலியுறுத்தினார்.

இதேபோல் மத்திய அரசின் மிரட்டலுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜனநாயகத்தின் 4-வது தூணாக திகழ்வது ஊடகம். ஊடகச் சுதந் திரத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்