சென்னை: உத்தரகாண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு விரைந்து உதவ வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உருகி, அதன் காரணமாக உருவான வெள்ளம் குறித்து அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்.

பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து மீள வேண்டும் என விழைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]