புதுச்சேரி:  மாநில கொரோனா தடுப்பு பணிக்கு மத்தியஅரசு வெறும் ரூ.3 கோடி மட்டுமே உதவி செய்துள்ளது, மாற்றாந்தாய் மனப்போக்குடன் மோடி அரசு செயல்படுகிறது முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்தியஅரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது  மாநிலத்தில் இதுவரை கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில், மத்தியஅரசு வெறும், ரூ.3 கோடி மட்டுமே தந்துள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 449 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 19,455 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், 4847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 370 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 447 பேர் தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 14,228 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு செய்த முதல்வர் நாராயணசாமி, மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளி கடைபிடித்து, தொற்று பரவாமல் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், மாநிலத்தில் இதுவரை கொரோனா தடுப்பு பணிக்காக மாநில அரசு ரூ.400 கோடி செலவிட்டு உள்ளதாகவும், ஆனால் மத்தியஅரசு மாற்றாந்தாய் மனப்போக்கில், வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே மாநிலத்துக்கு நிதியாக வழங்கி உள்ளது என்று குற்றம் சாட்டினார்.