புவனேஸ்வர்

நாட்டின் புராதன நினைவுச் சின்னங்களை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் விட அரசு உத்தேசித்துள்ளது.

புவனேஸ்வரில் இந்திய சுற்றுப்பயண ஏற்பாட்டாளர்கள் சங்கம் சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து நேற்று ஒரு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.  அதில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அல்ஃபோன்ஸ், பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், மத்திய சுற்றுலாத்துறை செயலாளர் ராஷ்மி வர்மா மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் ராஷ்மி வர்மா கூறியதாவது :

”சுற்றுலாத்துறை அமைச்சகம், இந்தியத் தொல்பொருள் ஆய்வகம் 116 புராதன நினைவுச் சின்னங்களை கண்டறிந்துள்ளது.  இந்த நினைவுச் சின்னங்களை தனியார் பொறுப்பில் விட மத்திய அரசு உத்தேசித்துள்ளது.  தனியார் நிறுவனங்கள் இவற்றை தத்தெடுத்து, அந்த இடங்களின் சுத்தம் பேணுவது, சுற்றுலாப் பயணிகள் அதை காண வழி வகை செய்வது, மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை செய்து தர வேண்டும்.  இதற்கான கோரிக்கைகள் தனியார் நிறுவங்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.  ஒரிசாவில் மட்டும் கொனாரக் உட்பட பல நினவுச் சின்னங்கள் இது போல உள்ளன.” என தெரிவித்து உள்ளார்.

இதற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் வரவேற்புத் தெரிவித்த போதிலும்,  புராதன சின்னங்கள் தனியார் கைவசம் போவதை பலரும் எதிர்துள்ளனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் நிதீஷ்குமார் ஒரிசாவில் பல சுற்றுலாத்தலங்கள் உள்ளதால் இந்த மாநிலத்தில் இருந்து வெளிநாடுகள் அனைத்துக்கும் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என கூறினார்.