சென்னை:
7 வகையான சித்த மருத்துவ மருந்துகளை  கொரோனா தடுப்பு சிகிச்சைக்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக அமைச்சர் பாண்டியராஜன்  தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா  பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அலோபதி மருந்துகளை விட  சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதா மருந்துகள் நல்ல பலனை தருவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த மருந்துகளுக்கு அதிகாரப்பூர்வ அங்கிகாரம் கொடுப்பதில் இந்திய மருத்துவ கவுன்சில் பாரபட்சம் காட்டி வருகிறது. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றமும் கடுமையாக சாடியிருந்தது.
இந்தநிலையில், கொரோனா சிகிச்சைக்காக 7 சித்த மருத்துவ  மருந்துகள் ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.