சென்னை,
த்திய அரசை எங்களை மிரட்டுகிறது. தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை மற்றும், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீடு மற்றும் கோட்டை அலுவலக அறையில்  நடைபெற்ற வருமானவரித்துறையினரின் சோதனை என்பது எங்களை மிரட்டும் முயற்சி என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் குற்றம் சாட்டி யுள்ளார்.
மத்தியஅரசின் பணம் செல்லாது அறிவிப்புக்கு பின்னர், நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழக மணல் குவாரி காண்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டிலும் கடந்த வாரம் ரெய்டு நடைபெற்றது.
அவரிடம் இருந்து  பல நூறு கோடி ரூபாய்களையும், 177 கிலோ தங்க நகைகளையும், கோடிக்கண்கான சொத்துக்களுக்கான ஆவணங்களையும் அதிகாரிகள்  அள்ளிச் சென்றனர்.
ஆவணங்களை பரிசீலனை செய்ததில், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலரிடம் அவருக்கு மிகநெருக்கமானத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து தலைமைசெயலாளராக இருந்த ராமமோகன் ராவ், அவரது மகன் விவேக் இல்லம், அலுவல கம், சித்தூர், பெங்களூர் உட்பட 14 இடங்களில்  வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியதில் 40க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் 24 லட்சம் பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து ராம்மோகன் ராவ் அதிரடியாக தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, அடுத்த ரெய்டு யார் வீட்டில் என  தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கதி கலங்கி போய் உள்ளனர். அடுத்தது யார்  சிக்கப்போகி றார்கள்  என கோட்டை முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் இந்த செயல் தமிழகத்தை ஆண்டு வரும் அதிமுக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு தமிழக அரசுக்கு துரோகம் செய்வதாகவும், மறைமுகமாக மிரட்டுவ தாகவும் அதிமுக தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றதற்கு பாஜகவே காரணம் என்றும், மத்திய அரசின் கொள்கைகளை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று மறைமுகமாக பாஜக அரசு நிர்பந்தம் செய்கிறது என்று அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கூறியதாவது,
இந்த வருமானவரித்துறையின் சோதனைக்குப் பின்னால் மிகப்பெரும் உள்நோக்கம் உள்ளது.  தமிழக முதலமைச்சர் அம்மா புரட்சித்தலைவி இறந்த சில நாட்களிலேயே பாஜக அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.
மேலும்  முன்னாள் தலைமைச் செயலாளர் வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தியதில் உள்நோக்கம் இல்லை என்று உறுதியாகவும் கூற முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய வருமானவரித் துறை மற்றும் அமலாக்கத்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் தமிழக அரசியல் வாதிகள் மட்டுமின்றி அதிகாரிகளும் மிரண்டுபோய் உள்ளனர்.