சென்னை: சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா சோதனை செய்வது பற்றி மத்தியஅரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்த நிலையில், தொற்று பரவலுக்கான காரணமான சீனவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், உலக சுகாதார மையமான who, விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்க தேவையில்லை என அறிவித்து உள்ளது. ஆனால், இந்திய அரசு சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா சோதனை எடுக்க வேண்டியது கட்டாயம் என தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை செய்வது பற்றி மத்திய அரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும் என கூறினார். மான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்க தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அதனால், மத்திய அரசு வழிகாட்டலில்படி தமிழகஅரசு செயல்படும் என்றார்.
அரசு மருத்துவமனைகளில் அவலங்கள் நடைபெறுகிறது என்ற எதிர்க்ட்சியினரின் குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதல்ல என மறுத்த அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனை களில் நாள் ஒன்றுக்கு 10,000 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்றவர், நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தருவார் என காத்திருக்கிறோம்.
இவ்வாறு கூறினார்.