டில்லி:
விமானத்தில் செல்போன் பேசவும், இன்டர்நெட் பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு டிராய் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து மத்திய அரசு அமைத்த உயர்மட்ட குழுவும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. விமானம் புறப்ப்டடு 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கும் போது ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தலாம்.
இதற்கான ஏற்பாடுகளை செல்போன் நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் செய்ய அவகாசம் தேவைப்படும். அதனால் அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு பிறகு இத்திட்டம் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.