டெல்லி: கொரோனா அச்சுறுத்தல், பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட டிஏ உயர்வு மற்றும் அரியர் பணப்பலன்கள்  மீண்டும் பெறும் வகையில் இந்த மாதம் அறிவிப்பு வெளியிட மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 4 சதவிகிதம் டிஏ உயர்த்தப்படும் என தெரிகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு (2020) டிஏ உயர்வு உள்பட பல்வேறு சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது,  கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்தது, ஆனால் இப்போது அது மெதுவாக பாதையில் திரும்பியுள்ளது. வியாபாரமும் தொடங்கியுள்ளது. ஏனவே டிஏ உள்பட பணப்பலன்களை வழங்க முத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

மத்திய ஊழியர்களுக்கு தற்போது 17 சதவிகிதம் டிஏ கிடைத்து வருகிறது.  அதை மேலும் 4 சதவிகிதம் உயர்த்தும் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்தியஅரசு ஊழியர்களின் டிஏ 21 சதவிகிதமாக உயரும். இதன் காரணமாக,  சுமார் 50 லட்சம் மத்திய ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அல்லது ஓய்வூதியத்தை (Pension) மனதில் வைத்து பணவீக்கத்தை அறிவிக்க முடியும் என்று நிதி அமைச்சகம் ஏற்கனவே கூறியுள்ளது. DA மற்றும் DR செலவு ஆண்டுக்கு ரூ .12,510 கோடி ஆகும், ஆனால் அதிகரிப்புக்குப் பிறகு இது 14,595 கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. All India Consumer Price Index அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஜனவரி 2021ல் இருந்து அமலுக்கு வரும் என்றும் நம்பப்படுகிறது.