சென்னை:

தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதையும் மீறி ஆய்வகம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது; இதற்கு அந்த பகுதி மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதால், ஆய்வகம் அமைக்கும் பணிகள் தடை பட்டு வந்தன. இந்த நிலையில்,  நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது மத்திய அணுசக்தித்துறை அறிக்கை கொடுத்துள்ளதை தொடர்ந்து நியூட்ரினோ  ஆய்வகம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களவையில் இப்பிரச்னை குறித்த கேள்வி ஒன்றிற்கு மக்கள் குறைதீர்ப்பு துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனை கூறியுள்ளார்.

இதுகுறித்து உறுப்பினரின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ள அமைச்சர் ஜிதேந்திர சிங்  தேனி மாவட்டத்தில் உள்ள  பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையை குடைந்து அமைக்கப்படும். ஆய்வகத்தில் இயற்கையாக உருவாகும் வளிமண்டல நியூட்ரினோக்கள் குறித்து ஆராய்ச்சி செய்யப்படும். இதற்காக 51,000 டன் எடை கொண்ட இரும்பு கன அளவி பயன்படுத்தப்படும். காஸ்மிக் கதிர்களிலிருந்து எழும் ஒலியை கட்டுப்படுத்த மலையை குடைந்த ஆய்வகம் அமைக்கப்படுகிறது.இந்த ஆய்வகம் எந்த வித கதிர் வீச்சையும் வெளிபடுத்தாததால் சுற்றுப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.